< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கவர்னர் ஆர்.என்.ரவியுடன் புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்திப்பு
|22 Aug 2024 10:18 PM IST
தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று சந்தித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதன் காரணமாக, தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து, தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முதல்-அமைச்சரின் செயலாளர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று சந்தித்துள்ளார். தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் கவர்னரை சந்தித்து முருகானந்தம் வாழ்த்து பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.