< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
குப்பைகளை பிரித்து வாங்க புதிய சரக்கு வேன்கள்
|7 Jun 2023 11:37 PM IST
குப்பைகளை பிரித்து வாங்க புதிய சரக்கு வேன்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அப்புறப்படுத்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை பிரித்து வாங்க 16 புதிய சரக்கு வேன்கள் ஹைட்ராலிக் முறையில் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் கொடியசைத்து, தொடங்கி வைத்தார். மேலும் வாகனங்களின் சாவிகளை டிரைவர்களிடம் வழங்கினார். இதில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சித்ரா, நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத் அலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.