திருவாரூர்
சென்னை, திருச்சிக்கு புதிய பஸ்கள்
|மன்னார்குடியில் இருந்து சென்னை, திருச்சிக்கு புதிய பஸ்களை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் ரூ.46½ கோடி செலவில் நவீன புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தேரடி பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்காலிக பஸ் நிலையத்தில் நேற்று அரசு போக்குவரத்து கழகம் மன்னார்குடி கிளை சார்பில் மன்னார்குடியில் இருந்து திருச்சிக்கு 2 பஸ்களும், மன்னார்குடியில் இருந்து காஞ்சிபுரம், ஈரோடு, சென்னை ஆகிய வழித்தடங்களில் 3 பஸ்களும் என 5 புதிய பஸ்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மன்னார்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் நடைபெற்றது. புதிய பஸ்களை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்து பஸ்சில் பயணம் செய்தார். இதில் தமிழக அரசு போக்குவரத்து கழக நாகை மண்டல பொது மேலாளர் இளங்கோவன், கிளை மேலாளர் மதன்ராஜ், மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி, நகர் மன்ற தலைவர் மன்னை சோழராஜன், தி.மு.க. நகர செயலாளர் வீரா கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.