< Back
மாநில செய்திகள்
ரூ.26 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட பூமிபூஜை
திருப்பூர்
மாநில செய்திகள்

ரூ.26 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட பூமிபூஜை

தினத்தந்தி
|
23 Jun 2023 10:55 AM GMT

ரூ.26 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட பூமிபூஜை

திருப்பூர்

திருப்பூர் கோவில்வழியில் ரூ.26 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதில் மேயர், எம்.எல்.ஏ., கலெக்டர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

ரூ.26 கோடியில் புதிய பஸ் நிலையம்

திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில்வழியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது. தற்காலிக பஸ் நிலையமாக இருந்த பஸ் நிலைத்தை, நிரந்தர பஸ் நிலையமாக மாற்றி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.26 கோடியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று காலை கோவில்வழி பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பூமி பூஜையை தொடங்கி வைத்தார். திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

என்னென்ன வசதிகள்

புதிதாக கட்டப்படும் பஸ் நிலையத்தில் 42 பஸ்களை நிறுத்தி இயக்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளன. தரைத்தளம், முதல்தளத்துடன் கட்டப்படுகிறது. 35 கடைகள் கட்டப்படுகிறது. 550 இருசக்கர வாகனங்க நிறுத்தும் வாகன நிறுத்தம் அமைக்கப்படுகிறது. 3 ஷோரூம்கள், 1 உணவகம், தாய்மார் பாலூட்டும் அறை-1, ஏ.டி.எம். மையம்-1, டிக்கெட் முன்பதிவு மையம்-2, காத்திருக்கும் பெரிய அறைகள்-2, மின்தூக்கிகள்-3, கண்காணிப்பு கேமரா மையம்-1, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக தலா 25 கழிப்பிடங்கள், குடிநீர் வசதி, தகவல் மையம், காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்களுக்கான அறை உள்ளிட்ட வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. பஸ் நிலையத்தின் முன்புறம் அலங்கார வளைவுகள் இடம்பெறுகிறது. தினமும் 598 பஸ்கள் இங்கிருந்து இயக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


---------------

(பாக்ஸ்)

நொய்யல் ஆற்றின் மேல்

ரூ.14 கோடியில் புதிய பாலம்

திருப்பூர் மாநகராட்சி 43-வது வார்டுக்கு உட்பட்ட நடராஜ் தியேட்டர் அருகே ரூ.14 கோடியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பழைய உயர்மட்ட பாலம் அருகே புதிய பாலம் அமைத்து அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த பாலம் 105 மீட்டர் நீளம், 9.50 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. 20 தெருவிளக்குகளுடன் நொய்யல் ஆற்றின் கரையோரம் இருபுறமும் புதிய சாலைகளுக்கு இணைப்பு பாலமாக இந்த பாலம் அமைய உள்ளது. இந்த புதிய பாலத்தின் மூலமாக நாளொன்றுக்கு 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள். 18 மாதங்களில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Related Tags :
மேலும் செய்திகள்