நாகப்பட்டினம்
ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள்
|ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள்
திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரம், போலகம் ஊராட்சி மேலப்போலகம், திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடி பகுதிகளில் அரசு பள்ளிகள் சேதமடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்தன. இதனை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர். அதன்படி அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மூன்று பள்ளிகளுக்கும் தலா ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதேபோல் விற்குடி ஊராட்சியில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழலகம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், திருமருகல் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்வசெங்குட்டுவன், சரவணன், ஒன்றிய பொறியாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன், பௌஜியா பேகம் அபுசாலி, கார்த்திகேயன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.