< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவை மாவட்டத்துக்கு புதிய பா.ஜ.க. தலைவர் நியமனம் - அண்ணாமலை அறிவிப்பு
|27 Nov 2023 12:08 AM IST
பா.ஜ.க. மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு, பாலாஜி உத்தம ராமசாமி கடிதம் கொடுத்திருந்தார்.
சென்னை,
கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து பாலாஜி உத்தம ராமசாமியை விடுவித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக பா.ஜ.க. கட்சியின் கோயம்புத்தூர் நகர் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த பாலாஜி உத்தம ராமசாமி, தனது மாவட்டத்தை சிறப்பான முறையில் வழிநடத்தி களப்பணியாற்றி வந்தார். தற்போது சொந்த காரணங்களுக்காக பா.ஜ.க. மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார்.
அவரது கடிதத்தை ஏற்றுக்கொண்டு அவர் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார்.
கோயம்புத்தூர் நகர் மாவட்ட பொதுச்செயலாளராக பணியாற்றி வந்த ஜே.ரமேஷ்குமார், புதிய மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்" என்று அதில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.