< Back
மாநில செய்திகள்
புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி
தென்காசி
மாநில செய்திகள்

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
10 Sept 2023 12:15 AM IST

திருவேங்கடம் அருகே புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருவேங்கடம்:

திருவேங்கடம் தாலுகா காரிசாத்தான் பஞ்சாயத்து அ.ரெங்கசமுத்திரம் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணிக்கு அ.ரெங்கசமுத்திரம் இந்து கணபதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மாரிலட்சுமி தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் சமுத்திர பாண்டியன் முன்னிலை வைத்தார். இடைநிலை ஆசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார். ரேஷன் கடை முன்பு புறப்பட்ட இந்த பேரணி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் "கற்போம் கற்போம் கல்வி கற்போம்" "பெறுவோம் பெறுவோம் எழுத்தறிவு பெறுவோம்" உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர் தேவிகா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்