திருவண்ணாமலை
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்கம்
|ஆவூர் அரசு பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டது.
வேட்டவலம்
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் வேட்டவலம் அருகே ஆவூர் (இந்து) அரசு ஆரம்ப பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வம், தலைமைஆசிரியர் பீட்டர் பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் அனிதா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் மலர்விழி, சத்யா ஆகியோர் கலந்து கொண்டு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமரேசன் ஆகியோர் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார்கள்.
இதில் ஆசிரியர் பயிற்றுனர் உமாதேவி, ஆசிரியர்கள் ஜெயசுதா, மொக்தாருன்னிசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மைய தன்னார்வலர் சுதா நன்றி கூறினார்.