< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் புதிய பேட்டரி கார்
|7 Jun 2023 1:39 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் புதிய பேட்டரி கார் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் பிரதான சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்குள் 200 மீட்டர் தொலைவில் உள்ள வரவேற்பு அறைக்கு வர முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமப்படும் நிலை உள்ளது. இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், கலெக்டரின் நிதியில் இருந்து ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிதாக பேட்டரி கார் ஒன்றை வாங்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு நிதி ஒதுக்கினார். இதைத்தொடர்ந்து தற்போது, புதிதாக பேட்டரி கார் வாங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி கார் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.