< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
ராஜபாளையம் நகராட்சியில் புதிய செயலி
|25 Dec 2022 12:30 AM IST
ராஜபாளையம் நகராட்சியில் புதிய செயலி
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு மற்றும் தெளிவான வெளிப்படையான நிர்வாகம் செயல்படுத்துதல், அரசு நலத்திட்டங்களை முறையாக பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்தல் போன்ற பணிகளுக்காக புதிய செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ராஜபாளையம் நகர்மன்றத் தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி புதிய செயலியை வெளியிட்டார். நகர் மன்ற துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேல் முன்னிலை வகித்தார். செயலியின் இயக்கம் குறித்து கீதாஞ்சலி டெக்னாலஜிஸ், நிர்வாக இயக்குனர் வைரமுத்து விளக்கம் அளித்தார். முடிவில் நகராட்சி பொறியாளர் ரத்தினவேல் நன்றி கூறினார். விழாவில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.