< Back
மாநில செய்திகள்
புதிய அங்கன்வாடி, நூலக கட்டிடம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

புதிய அங்கன்வாடி, நூலக கட்டிடம்

தினத்தந்தி
|
2 Dec 2022 11:47 PM IST

நெல்வாய் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி, நூலக கட்டிடம் திறக்கப்பட்டது.

நெமிலி ஒன்றியம், நெல்வாய் ஊராட்சி சின்னதென்னல் கிராமத்தில் 2019-20-ம் நிதியாண்டின், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் மற்றும் நெல்வாய் ஊராட்சி எஸ்.கொளத்தூர் கிராமத்தில் 2021-22-ம் நிதியாண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், ரூ.3 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில் பழுதுபார்க்கப்பட்ட நூலக கட்டிடம் திறப்பு விழா நடந்தது. நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பெ.வடிவேலு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து, நெல்வாய் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகம்மாள் சுப்பிரமணி, ஒன்றியக் குழு உறுப்பினர் சங்கீதா கதிரவன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனலட்சுமி தனசேகர், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி பணியாளர்கள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்