< Back
மாநில செய்திகள்
புதிய அங்கன்வாடி மையங்கள்
விருதுநகர்
மாநில செய்திகள்

புதிய அங்கன்வாடி மையங்கள்

தினத்தந்தி
|
17 July 2023 1:27 AM IST

காரியாபட்டி பகுதியில் புதிய அங்கன்வாடி மையங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

காரியாபட்டி,

காரியாபட்டி பகுதியில் புதிய அங்கன்வாடி மையங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

திறப்பு விழா

காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்-2 எ.நெடுங்குளம், வார்டு எண்-3, காமராஜர் காலனி, ஜெகஜீவன் ராம் தெரு, வார்டு எண்-8, அச்சம்பட்டி, வார்டு எண்-14, கே கரிசகுளம் ஆகிய பகுதியில் புதிதாக கட்டப்பட்ட 5 அங்கன்வாடி மைய கட்டிடங்களை அமைச்சர் தங்கம்தென்னரசு திறந்து வைத்தார்.

அனைவருக்கும் வீடு

மேலும் வீடு இல்லாமல் வாழ்ந்துவரும் குடும்பங்களுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 33 பயனாளிகளுக்கு பணி ஆணையினையும் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஸ்ரீ ரவிக்குமார், துணைத்தலைவர் ரூபி, காரியாபட்டி தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் தங்கபாண்டியன், துணைத் தலைவர் கல்யாணி, மாவட்ட பிரதிநிதி சங்கர பாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், முகமது முஸ்தபா, சங்கரேஸ்வரன், முனீஸ்வரி, தீபா, சரஸ்வதி, முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்