< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
ரூ.12 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம்; மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
|30 Jun 2023 12:15 AM IST
கீழப்பாவூர் அருகே ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
பாவூர்சத்திரம்:
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் நாகல்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூபாய் 12 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை நேற்று ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் திறந்து வைத்தார்.
விழாவில் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்பு செயலாளர் ராதா, மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் எஸ்.ஏ.சேர்மத்துரை, மண்டல செயலாளர் உச்சிமாகாளி, பஞ்சாயத்து தலைவர் கோமதிநாச்சியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.