< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
மீஞ்சூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை
|30 Jun 2023 4:16 PM IST
மீஞ்சூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேரடி தெருவில் தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்து சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் காணப்படுகிறது. எனவே மழை காலங்களில் விரிசல்கள் வழியாக மழைநீர் கசிவதால் குழந்தைகள் அவதியடைந்து வருகின்றனர். மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள இந்த அங்கன்வாடி மையத்தை இடித்து விட்டு புதிதாக குழந்தைகளுக்கு கட்டிடம் கட்டி தர அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.