< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
புதிய அங்கன்வாடி கட்டிடம்
|18 Aug 2023 12:15 AM IST
சேமங்கலம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ஒன்றியக்குழு தலைவர் திறந்து வைத்தார்.
திருவாரூர் ஒன்றியம் சேமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், புவனேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை சுகந்திபாலா வரவேற்றார். இதில் புதிய கட்டிடத்தை ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா திறந்து வைத்து பேசினார்.இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மணிகண்டன், குணசேகரன், ரேவதி வரதராஜன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்புசெழியன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் உதயகுமார், குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் தனலட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.