< Back
மாநில செய்திகள்
அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகள்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
மாநில செய்திகள்

அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகள்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

தினத்தந்தி
|
20 March 2023 5:50 PM IST

அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளதாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்குகளும் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பான சூழல் கானப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து உள்ளதாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதாவது, பழங்குடியின நலப்பிரிவு உள்ளிட்ட பொறுப்புகளுக்கு செயலாளர்களை நியமனம் செய்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்