< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"சர்வாதிகாரமாக சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க முடியாது" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
|18 Aug 2022 10:38 PM IST
இலவசங்கள் மக்களுக்கு பயனளிக்கிறதா என தற்போது விவாதம் நடந்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.
மதுரை,
மதுரையில் இன்று தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இலவசங்கள் மக்களுக்கு பயனளிக்கிறதா என தற்போது விவாதம் நடந்து வருவதாகவும், விவாதத்திற்கு அப்பால் செயல்திறன் தான் முக்கியம் என்றும் தெரிவித்தார்.
அரசு செயல்படுத்தும் திட்டம் மக்களுக்கு சென்று சேர்கிறதா என்பதே முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், சர்வாதிகாரமாக சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.