கரூர்
தெருநாய்களுக்கு கருத்தடை
|தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.
மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள கால்நடைகளை தெருநாய்கள் கடித்து குதறியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறி மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக நேற்று மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கான கருத்தடை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாரித்தங்கால் நம்பெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணைய ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் மற்றும் வீட்டில் வளர்ந்து வந்த நாய்கள் கருத்தடை செய்யப்பட்டது. மேலும், நாய் கடித்தவுடன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.