நெல்லையில் பகீர் கிளப்பிய நியோமேக்ஸ் நிதி மோசடி - இயக்குனர்கள் இருவர் கைது
|நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் திருநெல்வேலி கிளை நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை,
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் திருநெல்வேலி கிளை நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். இது மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த மோசடி நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் திருநெல்வேலி கிளை நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சிவகங்கை, தேவக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சைமன் ராஜா, கபில் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
முறையாக பணத்தை திருப்பி வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதாக நிறுவனத்தில் முதலீடு செய்த நபர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான வீர சக்தி உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 17 கிளை நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலை உயர்ந்த கார்கள், தங்கம் போன்ற பொருட்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.