< Back
மாநில செய்திகள்
நெல்லையப்பர் கோவில் திருக்கல்யாண விழா; அம்பாளுக்கு சிவபெருமான் காட்சியளிக்கும் வைபவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
மாநில செய்திகள்

நெல்லையப்பர் கோவில் திருக்கல்யாண விழா; அம்பாளுக்கு சிவபெருமான் காட்சியளிக்கும் வைபவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

தினத்தந்தி
|
22 Oct 2022 8:04 PM IST

சுவாமி-அம்பாள் வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

நெல்லை,

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோவிலுக்குள் வைத்து உள்திருவிழாவாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் திருக்கல்யாண திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பா நதியில் தபசு இருக்கும் காந்திமதி அம்பாளுக்கு சிவபெருமான் காட்சியளிக்கும் வைபவம் இன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகா தீபாராதணை காட்டப்பட்டது.

இதையடுத்து மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) நெல்லையப்பர் கோவில் ஆயிரம்கால் மண்டபத்தில் அதிகாலை 4 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்