< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெல்லையப்பர் கோவில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
|9 Jun 2023 10:38 AM IST
மாநகராட்சி காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை,
நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலில், ஆணி பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான விநாயகர் திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து ஜூலை 2ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. இதற்காக, தேரை சுத்தப்படுத்தும் பணி மற்றும் பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. பொதுமக்கள் காணும் வகையில், தேரை மூடியிருந்த தகடுகள் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநகராட்சி காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.