< Back
மாநில செய்திகள்
நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர விழா; காந்திமதி அம்பாள் செப்பு தேரில் வீதிஉலா
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர விழா; காந்திமதி அம்பாள் செப்பு தேரில் வீதிஉலா

தினத்தந்தி
|
30 July 2022 8:06 PM GMT

நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர விழாவையொட்டி காந்திமதி அம்பாள் செப்பு தேரில் வீதிஉலா புறப்பாடு நடந்தது.

நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 25-ந் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை தொடர்ந்து தினமும் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. 9-வது திருநாளான நேற்று காலை காந்திமதி அம்பாள் செப்பு தேரில் எழுந்தருளினார். அந்த தேர் 4 ரதவீதிகளிலும் வலம் வந்தது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 10-வது நாள் விழாவில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு ஆடிப்பூரம் முளைகட்டுதல் வைபவம் நடைபெறுகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்