நெல்லை: மானூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி
|மானூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மானூர்,
நெல்லை மாவட்டம், கீலநீலிதனல்லூர் அருகே உள்ள ஆயாள்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் பாக்கியசாமி (வயது 55). இவர் நெல்லையில் இருந்து தனது காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். காரை அவரது மகன் மனோஜ் குமார் ஓட்டி வந்தார்.
கார் ராமயன்பட்டி போலீஸ் காலனி அருகே வந்த போது எதிரே வந்த மற்றொரு கார் பாக்கியசாமி வந்த கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பாக்கியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மனோஜ் குமார் மற்றும் மற்றொரு காரை ஓட்டி வந்த கிருஷ்ணமூர்த்தி (51) என்பவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் பலியான பாக்கியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.