< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலை சீரமைப்பு - போக்குவரத்து தொடக்கம்
|23 Dec 2023 6:56 AM IST
நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேதமடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன.
நெல்லை,
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் குளங்கள் உடைப்பால் நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. இதனால் 3 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேதமடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நெல்லை-திருச்செந்தூர் இடையே பேருந்து, லாரி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் தொடங்கியுள்ளது.