< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெல்லை - தூத்துக்குடி பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் ரத்து
|19 Aug 2024 8:24 AM IST
நெல்லை - தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெல்லை,
நெல்லையில் இருந்து கங்கைகொண்டான், வாஞ்சிமணியாச்சி, தட்டப்பாறை வழியாக தூத்துக்குடிக்கு தினமும் காலை 7.35 மணிக்கும், மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து மாலை 6.25 மணிக்கும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே பாலக்காடு - நெல்லை இடையே இயக்கப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி - நெல்லை இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படாது என ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நெல்லை - தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.