நெல்லை-திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நாளை ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
|நெல்லை பகுதிகளில் நாளை ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நெல்லை,
நெல்லை ரெயில்வே யார்டு பகுதியில் நடைபெறும் பாலம் பராமரிப்பு பணி காரணமாக நாளை ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை-திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்(வண்டி எண்-06675) நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் திருச்செந்தூர்-வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லா சிறப்பு ரெயிலும் நாளை முழுமையாக ரத்து செய்யப்ப்படுகிறது. நாகர்கோவில்-தாம்பரம் இடையிலான அந்தியோதயா சிறப்பு ரெயில் நாளை விருதுநகரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரெயில் நாளை பாலக்காட்டில் இருந்து கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், திருச்செந்தூர்-பாலக்காடு விரைவு ரெயில் நாளை திருச்செந்தூருக்கு பதில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.