< Back
மாநில செய்திகள்
நெல்லை: நாங்குநேரி அருகே அரிவாளை காட்டி மிரட்டி ரூ.33 லட்சம் கொள்ளை - 3 பேர் கைது
மாநில செய்திகள்

நெல்லை: நாங்குநேரி அருகே அரிவாளை காட்டி மிரட்டி ரூ.33 லட்சம் கொள்ளை - 3 பேர் கைது

தினத்தந்தி
|
18 April 2024 8:27 PM IST

பைக்கில் சென்றவர்களை மிரட்டி ரூ.33 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள வாகைக்குளம் பகுதியில் 33 லட்ச ரூபாய் பணத்துடன் பைக்கில் சென்று கொண்டிருந்த முருகன் மற்றும் வானமாமாலை ஆகியோரை 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளனர். பின்னர் அரிவாளை காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான புகாரின் பேரில், போலீசார் உடனடியாக தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 27 லட்ச ரூபாய் வரையிலான பணத்தை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து தலைமறைவாக உள்ள 5 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். அதே சமயம், தேர்தல் நேரத்தின்போது சுமார் 33 லட்சம் ரூபாய் பணத்துடன் இருவர் பைக்கில் சென்றது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் செய்திகள்