< Back
மாநில செய்திகள்
நெல்லை: திருக்குறுங்குடி அருகே யானை நடமாட்டத்தால் நம்பி கோவிலுக்கு செல்ல தடை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

நெல்லை: திருக்குறுங்குடி அருகே யானை நடமாட்டத்தால் நம்பி கோவிலுக்கு செல்ல தடை

தினத்தந்தி
|
10 Oct 2023 9:29 AM IST

திருக்குறுங்குடி அருகே யானை நடமாட்டத்தால் நம்பி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியில் திருமலை நம்பி கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இக்கோவிலில் தமிழ் மாத முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், திருக்குறுங்குடி அருகே யானை நடமாட்டம் உள்ளதன் காரணமாக, நம்பி கோவிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று ஒருநாள் மட்டும் நம்பி கோவிலுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிப்பதாக முண்டந்துறை புலிகள் காப்பகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்