< Back
மாநில செய்திகள்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு
மாநில செய்திகள்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு

தினத்தந்தி
|
4 May 2024 11:07 AM IST

தந்தை மாயமானதாக கேபி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

நெல்லை,

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரான கேபி ஜெயக்குமாரை காணவில்லை என்று அவரது மகன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். கடந்த 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு கே.பி. ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் ஜெயக்குமார் போலீசில் புகார் அளித்து இருந்தார்.கேபி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், கரைசுத்து புதூர் அருகே உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நெல்லை மாவட்ட காங்கிரசில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருப்பது நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்