< Back
மாநில செய்திகள்
நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம சாவு; குற்றவாளிகளை நெருங்கும் போலீசார்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம சாவு; குற்றவாளிகளை நெருங்கும் போலீசார்

தினத்தந்தி
|
12 May 2024 4:35 AM IST

ஜெயக்குமார் தனசிங் இறந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அவரது இறப்பு குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். கடந்த 4-ந் தேதி தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் சாவதற்கு முன் எழுதிய கடிதங்களும் வெளியாகின.

ஜெயக்குமார் தனசிங் இறந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

இதனால் கூடுதல் தடயங்களை சேகரிப்பதற்காக மதுரை, கோவையில் இருந்து தடயவியல் புலனாய்வு துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன்தினம் தோட்டத்தில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கிணற்றில் இருந்து பழைய கத்தியும் கண்ெடடுக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்று 2-வது நாளாக தடயவியல் புலனாய்வு துறை நிபுணர்கள் தோட்டத்தில் சென்று ஆய்வு நடத்தினார்கள். ஜெயக்குமார் தனசிங் பிணமாக கிடந்த இடத்தில் மண்வெட்டியால் தோண்டி அதில் ஏதாவது தடயங்கள் கிடைக்குமா? என்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரும் தோட்டத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதற்கிடையே தோட்ட பணியாளரான கணேசனிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அவர் ெதரிவித்த தகவல்களை பதிவு செய்து கொண்டனர். இவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தடயங்கள் சேகரிக்கும் பணி 2-வது நாளாக நடைபெற்றதால் இந்த வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குற்றவாளிகளை நெருங்கி உள்ளோம். விரைவில் இந்த வழக்கு முடிவுக்கு வரும்'' என்றார்.

மேலும் செய்திகள்