< Back
மாநில செய்திகள்
நெல்லை: களக்காடு அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே மோதல் - ஒருவருக்கு கத்திக்குத்து
மாநில செய்திகள்

நெல்லை: களக்காடு அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே மோதல் - ஒருவருக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
6 Dec 2022 3:43 PM IST

நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த பள்ளியில் நோட்டு புத்தகத்தை மறைத்து வைத்தது தொடர்பாக பிளஸ் டூ மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது இரு தரப்பு மோதலாக வெடித்துள்ளது. இதை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவனிடம் பெற்றோரை அழைத்து வரும்படி அவர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்துள்ள அந்த மாணவன், இன்று பள்ளிக்கு கத்தியுடன் வந்ததுடன் மற்றொரு தரப்பு மாணவரின் முதுகில் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவன் இசைச்செல்வன் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அந்த மாணவன் அனுமதிக்கப் பட்டுள்ளார். அங்கு மாணவன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த களக்காடு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட கல்வி அதிகாரியும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்த உள்ளார். அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே மோதல் சம்பவம் களக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்