< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெல்லை: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - ஓட்டல் உரிமையாளர் பலி
|11 July 2022 8:09 AM IST
அம்பை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஓட்டல் உரிமையாளர் உயிரிழந்தார்.
விக்கிரமசிங்கபுரம்ம்,
அம்பையில் பாரத் ஸ்டேட் பாங்க் எதிரில் ஓட்டல் நடத்தி வருபவர் பீர்முகம்மது ஹக்கீம்(வயது35). இவர் நேற்று பக்ரீத் தினத்தை முன்னிட்டு தனது நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் சிவா(29),கோபி (24) மற்றும் ராஜேஷ் (28) ஆகியோர் வந்த காரை சிவா ஓட்டிவந்தார்.
அப்போது கார் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் சாலை யோரத்தில் இருந்த பள்ளத்தில் பாய்ந்து. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பீர்முகம்மது ஹக்கீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த அம்பை போலீசார் சிவா,கோபி, ராஜேஷ் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.