< Back
மாநில செய்திகள்
30 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி நடைபயணம் தொடங்கியவர்களுடன்  பேச்சுவார்த்தை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

30 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி நடைபயணம் தொடங்கியவர்களுடன் பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
23 Feb 2023 10:22 PM IST

30 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி நடைபயணம் தொடங்கியவர்களுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கலசபாக்கம்

30 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி நடைபயணம் தொடங்கியவர்களுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை

கலசபாக்கத்தை அடுத்த பட்டியந்தல் கிராமத்தில் ஏரி கரையில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 30 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த வீடுகள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வீடுகளை அகற்றப்பட்டன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு சார்பில் வேறு இடத்தில் மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுவரை வீடுகள் வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்து கலசப்பாக்கம் விவசாய சங்கம் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் பட்டியந்தல் காளியம்மன் கோவில் அருகில் இருந்து நடைபயணம் தொடங்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி மற்றும் கடலாடி போலீசார் நேரில் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 30 குடும்பத்தினருக்கும் ஒரு மாதத்திற்குள் பட்டியந்தல் கிராமத்தில் இடம் தேர்வு செய்து பட்டா வழங்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்ற விவசாய சங்கத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் நடை பயணத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்