போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் அடுத்த மாதம் 6ம் தேதி பேச்சுவார்த்தை..
|சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது
சென்னை,
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பவை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த நிலையில்,அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் அடுத்த மாதம் (மார்ச்) 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15-வது ஊதிய உயர்வு சம்பந்தமாக ஏற்கனவே குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக துணை குழு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.