நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
|நீட் தேர்வு முடிவுகளில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
வெயிலிலும், மழையிலும் கஷ்டப்பட்ட தமிழிசை சவுந்தரராஜனுக்கு மத்திய மந்திரி பதவி அளிக்காமல், மாநில பிரிவினை வாதம் பேசும் நிர்மலா சீதாராமனுக்கு 3-வது முறையாக மத்திய மந்திரியாக வாய்ப்பை பாஜக வழங்கி உள்ளது.
நீட் தேர்வு முடிவுகளில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நீட் தேர்வு முடித்து வைக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவும் இணைந்து நீட் தேர்வை மீண்டும் கொண்டு வந்தார்கள்.
பதவியேற்ற ஒரே நாளில் பாஜகவின் சவகாசம் எப்படி இருக்கும் என்பதை கேரள பாஜக எம்.பி. சுரேஷ் கோபி உணர்ந்து இருப்பார். கேரள மக்களிடம் பதில் சொல்ல முடியாது என்பதனால் மத்திய இணை மந்திரி பதவியில் இருந்து விலக நினைத்திருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.