< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
கர்ப்பிணிகள் வழிபடும் வேப்ப மரம்
|29 Sept 2023 2:48 AM IST
கர்ப்பிணிகள் வேப்ப மரத்தை வழிபட்டு வருகின்றனர்
சிலைமான்,
மதுரை சக்கிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகள் தாங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி வளையல்களை கழற்றி அங்குள்ள வேப்ப மர கிளையில் தொங்க விட்டு வழிபட்டு செல்கின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு முன்பாக நாங்கள் அணியும் கண்ணாடி வளையல்களை கழற்றி வெளியே போட்டால் யார் காலையும் குத்தி விட வாய்ப்பு உள்ளது. இதனால் இங்குள்ள வேப்பமரக்கிளையில் போட்டு வணங்கி செல்வதால் குழந்தை சுகப்பிரசவ மாக பிறக்கும் என நம்பிக்கை கர்ப்பிணிகளுக்கு உள்ளது. பிரசவத்துக்கு பிறகு தாயும், சேயும் நலமுடன் இருப்பார்கள் என்ற ஐதீகம் உள்ளது.