< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
நீடாமங்கலம் புனிதசெபஸ்தியார் ஆலய தேர்பவனி
|27 April 2023 12:15 AM IST
நீடாமங்கலம் புனிதசெபஸ்தியார் ஆலய தேர்பவனி
நீடாமங்கலம் மண்டபத்தெரு புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு தேர் பவனி நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 18-ந்தேதி பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் கொடியேற்றி வைக்க கூட்டுத்திருப்பலி நடந்தது.
தொடர்ந்து தினமும் நவநாள் ஜெபம் நடத்தப்பட்டது. நேற்றுமுன்தினம் 25-ந்தேதி பங்குத்தந்தையால் தேர் புனிதம் செய்யப்பட்டது. மின் அலங்காரத்துடனும், வாணவேடிக்கையுடனும் இன்னிசை முழங்க புனித செபஸ்தியாரின் உருவம் தாங்கிய தேர்பவனி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை பங்குத்தந்தையால் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடி இறக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நீடாமங்கலம் மண்டபத்தெரு மக்கள், பங்குத்தந்தை, இளைஞர்கள் செய்திருந்தனர்.