< Back
மாநில செய்திகள்
நெருங்கும் ஈரோடு இடைத்தேர்தல்..அதிகாரிகள் கூட்டத்தில் பண மாலையுடன் வந்த வேட்பாளர்
மாநில செய்திகள்

நெருங்கும் ஈரோடு இடைத்தேர்தல்..அதிகாரிகள் கூட்டத்தில் பண மாலையுடன் வந்த வேட்பாளர்

தினத்தந்தி
|
11 Feb 2023 10:21 PM IST

தேர்தல் நடத்தை விதிகள் குறித்து நடைபெற்ற கூட்டத்தின் முடிவில், 20 ரூபாய் நோட்டுகள் கொண்ட பண மாலையை அணிந்து வந்த சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோட்டில் அனைத்து வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்து நடைபெற்ற கூட்டத்தின் முடிவில், 20 ரூபாய் நோட்டுகள் கொண்ட பண மாலையை அணிந்து வந்த சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பின் வேட்பாளர் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் 20 ரூபாய் நோட்டு பணமாலை அணிந்து கொண்டு அதிகாரிகள் துணையுடன் பணபட்டுவாடா நடைபெறுவதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் செய்திகள்