< Back
மாநில செய்திகள்
விளாத்திகுளம் அருகே நூலக வாசகர் வட்டத்தினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

விளாத்திகுளம் அருகே நூலக வாசகர் வட்டத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
5 July 2023 12:15 AM IST

விளாத்திகுளம் அருகே நூலக வாசகர் வட்டத்தினர் ஆர்ப்பாட்டம்

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் வாசகர் வட்டம் சார்பில் 65 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் கிளை நூலகம் இயங்கி வருகிறது. அதிலும் நூலக கட்டிடம் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் மழைக்காலங்களில் மேற்கூரை கான்கிரீட்டில் நீர் கசிவு ஏற்பட்டு புத்தகங்கள் நனைந்து வீணாகின்றன.

எனவே, நூலகத்திற்கு புதிய கட்டிடத்தை இணையதள வசதியுடன் கட்டித்தரக் கோரி வாசகர்கள் வட்டம் சார்பில் நேற்று புதூர் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாசகர் வட்ட தலைவர் பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் முனீஸ்வரன், மலர்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நூலக வாசகர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்