< Back
மாநில செய்திகள்
வீரபாண்டி அருகேஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு; விவசாயி கைது
தேனி
மாநில செய்திகள்

வீரபாண்டி அருகேஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு; விவசாயி கைது

தினத்தந்தி
|
31 Dec 2022 12:15 AM IST

வீரபாண்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

வீரபாண்டி அருகே உள்ள முத்துதேவன்பட்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயமணி. விவசாயி. இவர், வீட்டின் முன்பு ஆக்கிரமிப்பு செய்து கழிப்பறை கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 27-ந்தேதி வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுக நயினார், பணியாளர்களுடன் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றார். அப்போது ஜெயமணி, அவரது மனைவி ஜோதி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதுகுறித்து ஆறுமுக நயினார் வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமணியை கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்