தேனி
வருசநாடு அருகேதூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை
|வருசநாடு அருகே தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
வருசநாடு அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது மகள் நதியா (வயது 17). இவர், அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் நதியா பள்ளிக்கு சென்றார். மகாலட்சுமி கண்டமனூருக்கு டெய்லர் வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து மாலையில் மகாலட்சுமி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் நதியா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இந்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு கூடினர். தகவல் அறிந்த வருசநாடு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் நதியாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நதியா தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.