< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
வருசநாடு அருகேசாலை அமைக்கும் பணி தீவிரம்
|3 Jan 2023 12:15 AM IST
வருசநாடு அருகே சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வருசநாடு அருகே முருக்கோடை-எருமைச்சுனை இடையே அமைக்கப்பட்டிருந்த தார் சாலை கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் மோட்டார்சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தது. இதையடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து டி.என்.ஆர்.எஸ். திட்டத்தின் கீழ் சாலை அமைக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக முருக்கோடை- எருமைச்சுனை இடையே புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.