< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
வரட்டுப்பள்ளம் அணை அருகே லாரி கவிழ்ந்து விபத்து
|5 Sept 2022 3:19 AM IST
வரட்டுப்பள்ளம் அணை அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்தியூர்
கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து மக்காச்சோளம் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு புறப்பட்டது. லாரியை ராமபுரத்தை சேர்ந்த ராஜா (வயது 40) என்பவர் ஓட்டினார். லாரியின் கிளீனராக மாதேவன் என்பவர் இருந்தார். இது தவிர ராமாபுரத்தை சேர்ந்த மற்றொருவரும் லாரியில் வந்து உள்ளார். நேற்று காலை பர்கூர் மலைப்பாதையில் வரட்டுப்பள்ளம் அணை அருகே சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் ராஜா, கிளீனர் மாதேவன் மற்றும் லாரியில் வந்த மற்றொருவர் உள்பட 3 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.இதுகுறித்து பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், தியாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.