< Back
மாநில செய்திகள்
வல்லநாடு அருகே மாட்டு வண்டி பந்தயம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

வல்லநாடு அருகே மாட்டு வண்டி பந்தயம்

தினத்தந்தி
|
29 Jun 2023 12:15 AM IST

வல்லநாடு அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

ஸ்ரீவைகுண்டம்:

வல்லநாடு அருகே உள்ள கலியாவூர் கல்யாணி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு பெரிய மற்றும் சின்ன மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தை முறப்பநாடு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலியாவூரில் இருந்து வல்லநாடு செல்லும் சாலையில் 7 கி.மீ. தூரத்துக்கு நடந்த இந்த பந்தயத்தில் 8 வண்டிகள் பங்கேற்றன. இதில் செய்துங்கநல்லூர் குமார் பாண்டியன் மாட்டு வண்டி முதலிடத்தையும், நொச்சிக்குளம் தங்கமுத்து மாட்டுவண்டி 2-வது இடத்தையும், நாலந்தலா உதயம் துரைப்பாண்டியன் மாட்டு வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன. இந்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதேபோன்று 6 கி.மீ. தூரத்துக்கு நடந்த சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 16 வண்டிகள் பங்கேற்றன. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிராமத்தினர் கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்