< Back
மாநில செய்திகள்
வடலூர் அருகே கார்கள் மோதல்; டிரைவர் பலி
கடலூர்
மாநில செய்திகள்

வடலூர் அருகே கார்கள் மோதல்; டிரைவர் பலி

தினத்தந்தி
|
24 Dec 2022 12:15 AM IST

வடலூர் அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் உயிாிழந்தாா்.

வடலூர்,

விருத்தாசலம் ஆலடி ரோட்டை சேர்ந்தவர் ஷேக்உசேன் ஷெரிப் மகன் ஷேக்அப்துல்லா (வயது 34). கார் டிரைவர். இவர் நேற்று விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்த ராஜி (61) என்பவரை புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது காரில் அழைத்து சென்றார். பின்னர் இருவரும் அதே காரில் விருத்தாசலத்துக்கு புறப்பட்டனர்.

வடலூர் அடுத்த ஆண்டிக்குப்பம் மீன்மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடி நோக்கி வந்த காரும், இவர்கள் சென்ற காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் ஷேக் அப்துல்லா, ராஜி, மற்றொரு காரில் வந்த வடலூர் பெத்தநாயக்கன்குப்பத்தை சேர்ந்த தாமோதரன் மகன் விஷ்ணுகுமார் (27), கஞ்சநாதன்பேட்டையை சேர்ந்த முருகன் மகன் அஜித் (24) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷேக் அப்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார். ராஜி புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கும், விஷ்ணுகுமார் கடலூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அஜித் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்