< Back
மாநில செய்திகள்
உத்தமபாளையம் அருகே  கார் மோதி சிறுவன் பலி
தேனி
மாநில செய்திகள்

உத்தமபாளையம் அருகே கார் மோதி சிறுவன் பலி

தினத்தந்தி
|
21 Aug 2022 9:45 PM IST

உத்தமபாளையம் அருகே கார் மோதி சிறுவன் பரிதாபமாக இறந்தான்

சின்னமனூர் காந்தி நகரை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகன் ஜோன்ஸ்லி (வயது 7). நேற்று ஜான்சன், ஜோன்ஸ்லியை அழைத்து கொண்டு உத்தமபாளையம் அருகே கோவிந்தன்பட்டியில் நடந்த உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்றார். இந்நிலையில் உத்தமபாளையம்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் செபஸ்தியார் ஆலயம் அருகே ஜோஸ்லிள் நின்று கொண்டிருந்தான். அப்போது சபரிமலையில் இருந்து மதுரைக்கு சென்ற கார் அவன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் படுகாயமடைந்தான். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த மானாமதுரையை சேர்ந்த ரகுராமன் (37) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்