< Back
மாநில செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே  வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

தினத்தந்தி
|
18 Oct 2022 12:15 AM IST

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஷேக்உசேன்பேட்டையை சேர்ந்தவர் முக்தர் அலி(வயது 42). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவருடைய வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கும், முக்தர் அலிக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டை பார்வையிட்டனர். அப்போது பீரோவில் வைத்திருந்த 6½ பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை காணவில்லை. அவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்