< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
|10 Dec 2022 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் மகன் பிரேம்குமார்(வயது 24). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அருண்(17) என்பவரும் கெடிலத்தில் இருந்து பரிக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ஆவலம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் அருகே வந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, பிரேம்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பிரேம்குமார் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.