கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை அருகேலாரி மோதி வாலிபர் பலி
|உளுந்தூர்பேட்டை அருகே லாரி மோதி வாலிபர் உயிாிழந்தாா்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யப்பன் கோவிலுக்கு சென்று வந்திருந்தார். இந்த நிலையில் கோவில் பிரசாதத்தை தனது மாமியார் வீட்டில் கொடுப்பதற்காக கனகராஜ், நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பில்ராம்பட்டிற்கு புறப்பட்டார். சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளையூர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று கனகராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.