< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி அருகே தொழிலாளி வீடு புகுந்து ரூ.1½ லட்சம் திருட்டு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி அருகே தொழிலாளி வீடு புகுந்து ரூ.1½ லட்சம் திருட்டு

தினத்தந்தி
|
24 Jun 2023 12:15 AM IST

தூத்துக்குடி அருகே தொழிலாளி வீடு புகுந்து ரூ.1½ லட்சம் திருடப்பட்டது.

தூத்துக்குடி அருகே உள்ள கீழசெக்காரக்குடியைச் சேர்ந்தவர் செந்தட்டி (வயது 50). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி காந்திமதி (43). சம்பவத்தன்று இவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார்களாம். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவில் கிடந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தட்டி வீட்டின் உள்ளே சென்று பார்த்தாராம். அங்கு பீரோவில் இருந்த சுமார் ரூ.1½ லட்சம் பணத்தை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்